தமிழ் (Tamil)

“ கடன் மற்றும் முதலீடுகள் குறைகேள் அதிகாரி” (Credit and Investments Ombudsman) சேவைக்கு வருகைதாருங்கள்.

“ கடன் மற்றும் முதலீடுகள் குறைகேள் அதிகாரி” சேவையானது ‘ஆஸ்திரேலிய கடனீடு மற்றும் முதலீடுகள் ஆணைய’(Australian Securities and Investments Commission (ASIC))த்தால் அங்கீகரிக்கப்பட்ட, நிதி சேவைகள் துறையைச் சார்ந்த வெளிவாரி பிணக்குகளைத் தீர்க்கின்ற ஒரு திட்டமாகும்.

நிதி சேவைகள் வழங்குநருடனான முறைப்பாடுகளை சட்டரீதியான வழக்கு மூலம் தீர்ப்பதற்குப் பதிலாக இலகுவாகவும், சுதந்திரமாகவும் பிணக்குகளை தீர்க்கின்ற சேவைகளை “ கடன் மற்றும் முதலீடுகள் குறைகேள் அதிகாரி”(Credit and Investments Ombudsman) யினது சேவை வழங்குகிறது. கடன் சங்கங்கள் மற்றும் கட்டட கழகங்கள், வங்கியல்லாத கடன் வழங்குநர், அடகு (ஈடு) மற்றும் நிதி தரகர்கள், கடன் வசூலிப்போர், நிதி திட்டமிடுவோர் மற்றும் பல தரப்பட்ட நிதிசார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட ஆக்கப்பொருட்களை விநியோகிப்போர் ஆகியவர்கள் நிதிசேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளவர்களாவர்.

நுகர்வோருக்கு (பாவனையாளர்களுக்கு) இந்த சேவை இலவசமானதாகும்.

நிதி சேவை அல்லது ஆக்கப்பொருள் ஒன்றின் தொடர்பாக உங்களுக்கு முறைப்பாடு இருப்பின், “ கடன் மற்றும் முதலீடுகள் குறைகேள் அதிகாரி”(Credit and Investments Ombudsman) யினது சேவை உங்களுக்கு உதவக்கூடும்.

“ கடன் மற்றும் முதலீடுகள் குறைகேள் அதிகாரி”(Credit and Investments Ombudsman) யினது சேவையுடன் தொடர்புகொள்ள:

தொலைபேசி:

பாவனையாளர்/முறைப்பாடு விசாரணைகள்

காலை மணி 9 - மாலை மணி 5 திங்கள் முதல் வெள்ளி வரை AEST

தொலை’ இல: 1800 138 422 (கைப்பேசி கட்டணம் அறவிடப்படும்)

தொலை நகல் (Fax):02 9273 8400

புகார்கள்: 02 9273 8440

மின்அஞ்சல்: info@cio.org.au

எழுதவேண்டிய முகவரி:

PO Box A252
SYDNEY SOUTH NSW 1235

முறைப்பாட்டுப் படிவத்தை (Complaint Form) இணையத்தில் நேரடியாகப் பெற்று அதனைப் பாவித்து முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம்.


Contact TIS National

Service

Contact

Telephone Interpreter Service (24 hours, seven days per week) Telephone: 131 450
Telephone Interpreter Pre-Booking See: Telephone Interpreter Pre-Booking Form
On-site Interpreter Enquiry Line (business hours) Telephone: 1300 655 082
On-site Interpreter Bookings See: On-site Interpreter Booking Form
Document Translation Enquiries Your Local Adult Migrant English Program (AMEP)
See: Adult Migrant English Program (AMEP)
Client Liaison and Promotions Telephone: 1300 655 820
Email: tispromo@immi.gov.au
TIS National finance enquiries Telephone: 1300 304 604